சங்கர் கொலை வழக்கு, கெளசல்யா கம்பீர பேட்டி..வீடியோ

  • 7 years ago
என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார். தன்னுடன் சட்டப்போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து உடுமலைப்பேட்டையில் உள்ள கவுசல்யா கருத்து கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை வாசித்த கவுசல்யா, என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் தராமல் நீதிமன்ற காவலிலேயே வைத்திருந்தனர். இது எந்த வழக்கிலும் நடக்காத ஒன்று. தனித்துவமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆணவக்கொலை வழக்கில் முதன் முறையாக பெரும்பான்மையானவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனைக்கு குறித்து என் கருத்து வேறாக இருந்தாலும் சங்கரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் சாதி வெறியர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். என் காத்திருப்பு வீண் போகவில்லை. என்னுடன் போராடிய அனைவருக்கும் நன்றி. நீதித்துறைக்கும் நன்றி.



Kousalya has expressed her happiness over the verdict in husband Shankar's murder case