• 6 years ago
உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் காதல் திருமணம் செய்த கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து, நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற வேறு ஜாதியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கவுசல்யா வீட்டில் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா சிகிச்சைக்கு பிறகு அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர். தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

Justice Alamelu Natarajan who has given verdict on Dalit youth Shankar murder case died due to breathing issue.

Category

🗞
News

Recommended