கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் எடப்பாடியார் பேசிய பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடியார், கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது என குறிப்பிட்டார். முதல்வரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடியாரின் பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில..தமிழக அமைச்சர்களின் பேச்சுகள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிவரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் முதலமைச்சரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, “மக்கள் சோப்பு உபயோகித்து குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது”, என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனும், “பிரதமர் மன்மோகன் சிங்”, என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையும், நெட்டிசன்கள் கேலி செய்தனர்.
தஞ்சையில் நேற்று (புதன் கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அம்மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். அப்போது, “காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழன், கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றை உலகறிய செய்த இரண்டாம் சரபோஜி மன்னன், பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, கணித மேதை ராமானுஜர், கம்பராமாயணம் தந்த சேக்கிழார், கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை தந்த பூமி இந்த தஞ்சை பூமி”, என பேசினார்.
இதில், கம்பராமாயணம் எழுதிய கம்பரை கூறாமல், “கம்பராமாயணம் தந்த சேக்கிழார்”, என கூறியுள்ளார். கம்பராமாயணம் என்ற பெயரிலேயே கம்பர் இருந்தும் முதலமைச்சர் தவறாக கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Here the Netizens Comments on CM Edappadi Palanisamy speech on Kambaramayanam.

Category
🗞
News