• 6 years ago
நிர்பயா வீட்டிலேயே இருந்திருந்தால் அவருக்கு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருக்காது என்றும் பெண்கள்தான் பலாத்காரத்தை தேடிக் கொள்வது பெண்கள்தான் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண்கள் மீதே வாரி தெளித்துள்ளார் சத்தீஸ்கர் மாநில ஆசிரியை. ராய்ப்பூரில் உள்ளது கேந்திரிய வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளி. இங்கு ஏராளமான மாணவர்களும் மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். இங்கு உயிரியல் துறை ஆசிரியையாக ஸ்னேலதா சங்கவார் உள்ளார். இருபாலர் பள்ளி என்றும் பாராமல் அசிங்கமாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருநாள் அவர் வகுப்பில் பேசியதை யாரோ ரெக்கார்டு செய்து அதை பள்ளி முதல்வரிடம் போட்டு காண்பித்துள்ளனர். அதை கேட்ட முதல்வருக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.நிர்பயா வீட்டிலேயே இருந்திருந்தால் அவருக்கு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருக்காது என்றும் பெண்கள்தான் பலாத்காரத்தை தேடிக் கொள்வது பெண்கள்தான் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண்கள் மீதே வாரி தெளித்துள்ளார் சத்தீஸ்கர் மாநில ஆசிரியை. ராய்ப்பூரில் உள்ளது கேந்திரிய வித்யாலயா என்ற மத்திய அரசு பள்ளி. இங்கு ஏராளமான மாணவர்களும் மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். இங்கு உயிரியல் துறை ஆசிரியையாக ஸ்னேலதா சங்கவார் உள்ளார். இருபாலர் பள்ளி என்றும் பாராமல் அசிங்கமாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருநாள் அவர் வகுப்பில் பேசியதை யாரோ ரெக்கார்டு செய்து அதை பள்ளி முதல்வரிடம் போட்டு காண்பித்துள்ளனர். அதை கேட்ட முதல்வருக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.அந்த ஆடியோவில் டீச்சர் பேசுகையில், பெண்கள் தங்கள் உடலை வெளிப்படுத்தும் கேவலமான ஆடைகள் மூலம் ஆண்களின் கவனத்தை ஈர்த்து பலாத்காரம் செய்ய தூண்டுகின்றனர். அதுபோல் ஜீன்ஸ் அணிந்து கொண்டும் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு வரும் பெண்களும் வெட்கமே இல்லாமல் ஆண்களை அழைக்கின்றனர். அதோடு இரவு 8.30 மணிக்கு கூட பிளஸ் 1 மாணவிகள் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு நான் கண்டித்தேன்.





A biology teacher in Chhattisgarh accused women of inviting rapes and molestation through revealing attire and blamed the young woman in the Nirbhaya gangrape case.

Category

🗞
News

Recommended