• 7 years ago
மாணவிகளை தவறான பாதைக்கு நிர்ப்பந்தப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூாியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவா் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக நிர்மலா தேவியின் பெயரில் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.

அந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசும் பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவா்களது விருப்பத்திற்க நீங்கள் சம்மதம் தெரிவித்தால் அவா்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

Category

🗞
News

Recommended