• 7 years ago
2 ஜி வழக்கின் விசாரணையின் போது ஊடகங்கள் எவ்வாறு இந்த வழக்கு குறித்து செய்திகளை ஆர்வத்துடன் வெளியிட்டதோ அதே ஆர்வத்துடன் இந்த தீர்ப்பு குறித்தும், திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்தது. 2011ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இந்த வழக்கு திமுகவை அழிக்க வேண்டும் என திட்டமிட்டு தொடரப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதி அரசர் வழங்கியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து, திமுக எந்த தவறும் செய்யவில்லை என நிரூபணமாகியுள்ளது

MK.Stalin Says, media should with the same enthusiasm they spread the 2G scam, should spread the details of this verdict

Category

🗞
News

Recommended