அம்பலமான வினோத் ராயின் பொய் கணக்கு...வீடியோ

  • 7 years ago

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என போலியான தகவலை அளித்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கையளித்தார். அந்த அறிக்கையில், இழப்பு மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு ஒரு பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டை அதுவரை இந்தியா பார்த்ததே இல்லை. பலராலும் இந்த ஊழல் கணக்கை எழுத்தால் கூட எழுத முடியவில்லை. ஒரு பிரபல ஆங்கில செய்தித்தாள், இவர் கூறிய ஊழல் கணக்கின் வீரியத்தை சொல்ல, எண்ணுக்கு பின்னால், பூஜ்யம், பூஜ்யம் என முழுபக்க அளவில் எழுதி தலைப்பிட்டது.
வினோத்ராயின் இந்த தகவலால், நாட்டில் பெரும் குழப்பமே உருவானது. இவ்வளவு பெரிய ஊழல்வாதிகளா நம்மை ஆண்டார்கள் என்பது போல மக்கள் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டது. எனவேதான் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்பேரில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது.

Vinod Rai(ex-CAG chief) should apologize to the nation as there was no wrongdoing in the case, as he was the reason for 2G confusions.