உடல்நல குறைவு காரணமாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததும் அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் கங்கை அமரன் களம் இறங்கினார்.அப்போது தமிழிசை சௌந்தரராஜனுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் பணப்பட்டுவாடா காரணமாக அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், தினகரன் அணி சார்பில் தினகரன், திமுக சா்ர்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் என கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களே இந்த முறையும் போட்டியிடுகின்றனர்.ஆனால் பாஜக சார்பில் கரு நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். கங்கை அமரன் ஓரங்கட்டப்பட்டார், பயந்து கொண்டு ஓடி விட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய கங்கை அமரனை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், வேட்பாளர் கரு நாகராஜனும் சந்தித்தனர்.
Gangai Amaran explains why he has not contested in RK Nagar by poll. As he was suffering from illness so he could not contest in election.

Category
🗞
News