• 8 years ago
தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது பிரதமர் மோடி ஒரு இழிபிறவி எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர்.

இதற்காக அவரை கட்சியில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் கட்சி மேலிடம் விளக்கமும் கேட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாபர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், தன்னை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியதை நினைவு கூர்ந்தார்.

Category

🗞
News

Recommended