• 8 years ago
2ஜி வழக்கு காரணமாக கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதால் திமுகவின் கூட்டணி சாய்ஸ் இனி வரும் தேர்தல்களில் மாறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி திமுக, காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய இடமெல்லாம் அடியை ஏற்படுத்திய விவகாரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு. வாக்காளர்களிடம் இதன் தாக்கம் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்ப கூறி நாட்டிற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டிருக்குமோ, திமுக காங்கிரஸ் கட்சியினர் ஆதாயம் அடைந்திருப்பார்களோ என்று பல கோணங்களில் மக்கள் யோசிக்கத் தொடங்கினர்.

இதனால் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக முடியாத நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 2ஜி வழக்கின் தீர்ப்பானது பழமைவாய்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான எதிர்கால கூட்டணி அரசியலை மாற்றிப் போடும் என்று தெரிகிறது.

2ஜி வழக்கு என்பது கட்சியையே அழித்து விடும் அணுகுண்டாக இருந்து வந்தது. டெல்லியில் திமுகவை இந்த ஒரே வழக்கை காரணம் காட்டி பலரும் கட்சியினர் மற்றும் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தினர். இவைகளுக்கெல்லாம் சட்ட ரீதியில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே திமுகவினர் கருதுகின்றனர்.

After 2g verdict is in favour of DMK, hereafter DMK may go for hard bargain with political parties which includes congress for elections.

Category

🗞
News

Recommended