• 7 years ago
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து திமுகவினர் விழாக்கோலம் பூண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கால் சொல்லமுடியாத அளவு துன்பங்களை தாம் அனுபவித்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கனிமொழி. அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த ஆறு வருடங்களாக செய்யாத தவறுக்காக பலமுறை கடும் மனஉளைச்சலுக்கு ஆளானேன். சுரங்கப்பாதையில் பயணம் செய்யும் தான் என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த வழக்கை கடந்ததாகவும், இந்த வழக்கின் தீர்ப்பு அந்த வெளிச்சத்தை காட்டிவிட்டது.

நாட்டிற்கு பல லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் தான் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டதாகவும், திமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கவும், தேர்தலில் தோல்வியடைய செய்யவும் இந்த பழிவாங்குதல் நடவடிக்கை நடைபெற்றது.

20 நாட்களே ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த காரணத்திற்காக இந்த வழக்கில் தாம் சேர்க்கப்பட்டேன். அந்த நிறுவனத்தின் எந்த செயல்பாட்டிலும் தான் தலையிட்டது கூட இல்லை என்று, ஒரு கையெழுத்தோ அல்லது நிறுவனம் தொடர்பான மீட்டிங்கிலும் நான் பங்கேற்றதே இல்லை.

ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இருந்து கனிமொழி, அ.ராஜா, தயாளு அம்மாள் விடுதலை பெற்றுள்ளதற்கு ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியானதுதான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.


Corruption in 2G allocation already stands proven by Supreme Court's verdict, says Union Finance Minister Arun Jaitley. I am sure that the investigative agencies will have a close look at it (the judgement & acquittal of accused) & decide what has to be done, Arun Jaitley added.


Category

🗞
News

Recommended