• 7 years ago
சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேர் சிக்கியது எப்படி என்பது குறித்து புது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரள போகின்றனர் என்ற தகவலை கொடுத்ததே ஒரு ரவுடிதானாம். சென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு. கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடிகளுள் ஒருவராவார். இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதற்காக தனது கூட்டாளிகள் அனைவருடனும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைவரையும் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் திரட்டினார் பினு.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்த பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேரையும் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை உதவி ஆணையர் கண்ணன் கூறுகையில் பூந்தமல்லியில் ரவுடிகள் ஒன்று கூடுவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று எங்களின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பக்காவாக திட்டமிட்டோம். அதற்காக போலீஸ் வாகனத்தில் செல்லாமல் தனிப்பட்ட காரில் சென்றோம். பூந்தமல்லி சர்வீஸ் சாலை டூ மலையம்பாக்கத்தில் வேணு லாரி ஷெட்டில் பினு எனும் தேடப்படும் குற்றவாளி கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது.




Rowdy Binu and 76 more his associates arrest by Chennai Police. How the police round up the area, how is massive arrest possible etc, here are the details given.

Category

🗞
News

Recommended