• 7 years ago
ரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான்.

மேலும் தொழில் தனக்கு போட்டியாக உள்ள ராதாகிருஷ்ணன், மற்றும் சிடி மணி ஆகிய இருவரை அந்த பார்ட்டிக்கு அழைத்து போட்டுத்தள்ளவும் திட்டம் போட்டுள்ளான் பினு.

இதனை அறிந்த அந்த இருவரும் பார்ட்டிக்கு வராமல் தப்பியுள்ளனர். இந்நிலையில் தான் இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் அள்ளியது.

Category

🗞
News

Recommended