• 7 years ago
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையின் போது தப்பி ஓடிய 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவராக இருந்த இவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது வீட்டருகில் மர்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலரை தேடிய நிலையில் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம் ராஜூ என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர், கார்த்தி ஆகிய 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Police have arrested Three men in connection with the murdr of DMK functionary N Suresh Babu alias Pottu Suresh, on Friday.

Category

🗞
News

Recommended