• 7 years ago
ஆவடியில் உடல் எடைக்குறைப்பு லேகியம் சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக லேகியம் விற்பனையாளரை பிடித்து அடித்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப், 28. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரிழந்தார்.

Category

🗞
News

Recommended