• 2 years ago
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. அதிலும், சாதனா ஆபாசமாக பேசியபடி, வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளவாசிகளை அதிர வைத்தது. இந்நிலையில், இதுகுறித்து நச்சலூர் கிராம மக்கள், கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர்.அதில், 'கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து, சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், தங்களது பாணியில் 'அன்பான' அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே, 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே ஆபாசமாக பேசி, ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த 'டிக்டாக்' பிரபலம் ரவுடி பேபி சூர்யா, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த பயத்தில் தான் சாதனா இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளார் என்று வலைத்தளவாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும், போட்டிகள் ஏதுமின்றி, 'லைக்'குகளை பெருக்க, ஆடைகளை குறைத்த சாதனாவை போலீசார் எச்சரித்துள்ளனர். அடுத்தகட்டம், 'களி' தான் என்பதை சாதனாவிற்கு புரியும்படி போலீசார் சொன்னதால், 'இனி ஆபாச வீடியோ போட மாட்டேன்' என்று அலறியுள்ளார்.

Category

😹
Fun

Recommended