Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/18/2018
உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவிலின் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடங்கியது .

விழுப்புரம் கூவாகம் கிராமத்தில் உலக புகழ்பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் திருநங்கைகள் தங்களை கிருஷ்ணரின் மறுபிறவியாக பாவித்துக்கொண்டு அரவாணை கணவனாக நினைத்து ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர் .இந்த திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது இந்த முதல் நாள் விழாவில் கூவாகம். தொட்டி. கீழக்குப்பம். வேலூர். சிவலியான்குளம் உட்பட 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வீடுகளில் படையல் செய்து கொண்டு வந்த கூழ் குடங்களை கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் வைத்து படையல் செய்து சாகை வார்த்தல் நடைபெற்றது பின்னர் கோவிலின் கொடிமரத்தில் காப்புக்கட்டினர், இதனைத்தொடர்ந்து கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் 18 நாள் திருவிழா தொடங்கியது, இதில் 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும். பொதுமக்களும் கலந்துகொண்டனர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 1-ந் தேதி இரவு நடக்கிறது

Category

🗞
News

Recommended