19.03.2016இல் லண்டனில் நடந்த தோழர் புஸ்பராசா அவர்களின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடலுக்கு நானும் செல்வதாக இருந்தது.
கடந்த காலங்களில் அவருக்கும் எமக்குமிடையிலான தோழமைச் செயற்பாடுகள், சண்டைகள், சச்சரவுகள், உடன்பாடு- முரண்பாடுகள், நேசம், கோபம், அவரது மயிலிட்டி வீட்டில் எந்த நேரமானாலும் வெவ்வேறு இயக்கப் பொடியன்களும் சென்று பசி கலைத்த காலங்கள்..... இப்படியான வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இது எனக்கொரு நல்ல தருணமாக நினைத்திருந்தேன். நிகழ்ச்சி நிரலிலும் பெயர் போட்டு வெளியாகியிருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் எனது கடவுச் சீட்டில் ஏற்பட்ட தடங்கலால் லண்டன் பயணிக்க முடியவில்லை.
அதனால் எனது ஆவணச் சேகரிப்புக்குள் இருந்து தோழர் புஸ்பராசா பற்றிய இந்தப் பதிவைத் தொகுத்து அனுப்பியிருந்தேன்.
தோழருடைய நிறையப் பேச்சுக்கள் இருந்தபோதும், தனக்கு மிக நெருங்கிய தோழர்கள், நண்பர்களாக இருந்தாலும்கூட விமர்சனம் என்று வரும்போது எந்தவித சமரசமும் இன்றி, நேருக்கு நேர் தான் சொல்ல நினைத்ததை வார்த்தை அலங்காரங்கள் இன்றி, பூச்சுக்கள் இன்றி அவர் முன் வைக்கும் பாங்கு பிடித்திருந்ததால் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்.
-தோழமையுடன் தமயந்தி.

Category
🎵
Music