• 6 years ago
மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலகலமாக நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் மலையாளமக்களின் பாரம்பரிய 73 வது முத்துப்பல்லக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 73 வது ஆண்டாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து கும்ப கலச ஊர்வலம் நடந்தது. சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து, பஞ்ச வாத்தியம் பூக்காவடி, அம்பலவயல் காவடி, கருடசேவை, சிங்காரி மேளம், உலக்கையாட்டம், சிவ தாண்டவம், முத்துரத காளைகளுடன் துவங்கிய கும்ப கலச ஊர்வலம் மாரியம்மன் கோவிலை அடைந்தது.அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முத்துரத காளை வாகனத்தில், முத்துப்பல்லக்கு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம், பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம் முழங்க, நடந்தது. இதில், கேரள பள்ளிவாள் நடனம் நாசிக்டோல் மற்றும் ஆடல் பாடல்களுடன் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள்,நாட்டுப்புறப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன.இரவில் ஐயப்பன் கோவிலிலிருந்து குதிரை அலங்கார முத்துப் பல்லாக்கில் தந்தி மாரியம்மன் திரு வீதி உலா குன்னூர் பேருந்து நிலையம் வழியாக தந்தி மாரியம்மன் கோவிலைச் சென்றடைந்தது.இந்த விழாவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்காணார் பங்கேற்றனர்

Category

🗞
News

Recommended