• 7 years ago
குருபகவான் தற்போது வக்ரகதியில் இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நன்மை அடைந்த மேஷம், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் பொருளாதார கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. குரு வக்கிரமாக இருக்கும் போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள். இந்த குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ராசியினருக்கு வக்ர காலத்தில் நல்ல பலன்களை செய்வார் குரு பகவான்.

Recommended