• 7 years ago
பிரபல பேராசிரியரும், இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர்.

பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர். இவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்று A Brief History of Time. 76 வயதான ஹாக்கிங், லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். உலகத்தில் உள்ள அத்தனை சோம்பேறிகளும் படிக்க வேண்டிய பாடம் ஸ்டீபன் ஹாக்கிங். எதுவுமே செய்யாமல் முடங்கிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். எதையுமே அறிவியல் பூர்வமாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஹாக்கிங். நீ சீக்கிரம் செத்துப் போய் விடுவாய் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் ஹாக்கிங். அவருக்கு அப்போது 21 வயதுதான். மோட்டார் நியூரான் பாதிப்புக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் முடங்கியது அவரது வாழ்க்கை. ஆனால் அவர் முடங்கவில்லை. மரணத்துக்கே தண்ணி காட்டி வந்தவர். அசாத்தியமான புத்திசாலி. மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.

எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறியவர் ஹாக்கிங். மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்... நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும் என்று அடித்துக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

Category

🗞
News

Recommended