• 7 years ago
முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. நேரு குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

Sources said Central Bureau of Investigation to summons KN Nehru family to the murder of DMK functionary K. N. Ramajayam, brother of former transport minister K. N. Nehru

Category

🗞
News

Recommended