Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/31/2018
பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு இன்று சந்தித்தார். கணவர் நடராஜனின் மறைவையடுத்து 15 நாட்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். தஞ்சையில் அருளானந்த நகரில் தங்கியிருந்த அவர் இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பாக சசிகலாவை திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு அவரது வீட்டில் சந்தித்தார். அரை மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்க இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். கணவரை இழந்த சசிகலாவிடம் கேஎன் நேரு துக்கம் விசாரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

DMK former Minister KN Nehru meets Sasikala. Before leaving to Bengaluru Nehru has met Sasikala in her house.

Category

🗞
News

Recommended