முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நடராஜன் கொடுத்த நிலம்

  • 6 years ago
இலங்கைப் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட்ட நினைவு முற்றத்திற்கு தனது சொந்த ஊரான விளாரில் நிலத்தை வழங்கியவர் ம. நடராஜன். 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர் 2009-ல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. இதனையடுத்து இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்- திருச்சி நான்குவழிச் சாலையோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டது. வைகோ மற்றும் நல்லக்கண்ணுவால் இதன் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரு நினைவுத்தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழர் நினைவிடங்களுக்கு நிகழ்ந்த அவலங்களால், தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னமாக இது உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.


Sasikala's husband M.Natarajan given place to built Mullivaikkal memorial at his native Vilar in Thanjavur district, and also given Rs.45 lakhs after selling his car in the stage.

Category

🗞
News

Recommended