• 7 years ago

மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து நமது அம்மாவில் செய்தி வெளியானது. துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையை கூட்டினார். இதில் அதிமுகவுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம். இவர்கள் மூவரையும் விமர்சனம் செய்து நமது அம்மாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

Namadhu Amma Tamil Daily criticises Karunas, Thaniyarasu, Thamimun Ansari for participating in Stalin's competitive Assembly in Anna Arivalayam.

Category

🗞
News

Recommended