• 7 years ago
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகளால் வடலூரில் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என்று பாடி ஜீவ காருண்யத்தை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். சத்தியஞான சபையை இவர் வடலூரில் நிறுவினார்.

தைப்பூச நாளில் வள்ளலார் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா, இன்று தொடங்கியது. காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம்

Lakhs of devotees are thronging to Vadalur on the eve of Thaipoosam and Jothi darisanam.

Category

🗞
News

Recommended