• 7 years ago
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தமது தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு மதுசூதனன் எழுதியுள்ள கடிதம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தலைவர் இல்லாத அதிமுக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் மதுசூதனனின் திடீர் போர்க்கொடி வெளிப்படுத்தியுள்ளது. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதிலேயே அதிமுக பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. மதுசூதனனை நிறுத்தவே கூடாது என்பதில் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக இருந்தார்.
மதுசூதனன் ஜெயித்துவிட்டால் நிச்சயம் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடியும் தருவார்; இதனால் தமக்கான முக்கியத்துவம் பறிபோய்விடும் என்பதுதான் ஜெயக்குமாரின் பதற்றமாக இருந்தது. இதனால் பாலகங்கா, ஆதிராஜாராம், கோகுல இந்திரா என பலரது பெயரும் அடிபட்டது.

வேறுவழியே இல்லாமல் இன்னொரு தர்மயுத்தத்தைத் தவிர்க்க மதுசூதனனை வேட்பாளராக்கிவிட்டது அதிமுக. ஆனால் களத்தில் டெபாசிட்டை தக்க வைக்கவே பெரும் போராட்டம் மதுசூதனனுக்கு. அந்தளவுக்கு உள்ளடி வேலைகள் நடந்தது என்பது அதிமுகவில் உள்ள அனைவருக்குமே தெரிந்த கதைதான்.

AIADMK presidium chairman Madhusudhanan has written a letter to CM Edappadiyar and Deputy CM OPS on RK Nagar By election loss, Madhusudhanan's revolt against Senior Ministers has led to onemore Dharmayutham in AIADMK.

Category

🗞
News

Recommended