• 8 years ago
நடிகை மீரா மிதுன் நகைக்கடை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன். மேக்கப் போட பிடிக்காத அவர் மாடல் அழகியான பிறகே மேக்கப் போட்டாராம்.

இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 8 தோட்டாக்கள் படம் மூலம் மீரா நடிகையானார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீரா மிதுனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார் மீரா மிதுன். அந்த விளம்பரத்திற்காக அவர் புகைப்படத்திற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். உடல் நிறத்தை கருப்பாக்கி ஒரு புகைப்படத்தில் நகை மட்டுமே தெரியும்படி கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்துள்ளார். மற்றொரு புகைப்படத்திலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மீரா மிதுன் தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கூல், அருமை, அழகு டியர் என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


8 thottakkal and TSK actress Meera Mithun has released a picture of hers on social media. She took that picture for a jewellery shop advertisement. You won't believe that it is Meera.

Category

People

Recommended