• 7 years ago
தேவ் டி இந்தி பட ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது ஏதாவது கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு திரையுலகம் மீது புகார் தெரிவித்தார். பின்னர் பிரபலமான தெலுங்கு நடிகரை அறைந்ததாக கூறினார். இந்நிலையில் அவர் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த படம் தேவ் டி. அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள் என்று ராதிகா தெரிவித்துள்ளார். இயக்குனர் கேட்டுக் கொண்டதால் ராதிகா முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளார். அதன் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டது இல்லையாம். பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார். ராதிகா ஆப்தே பேட்டி அளித்தாலோ, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ இம்முறை என்ன குண்டை தூக்கிப் போடப் போகிறாரோ என்று பிரபலங்கள் வியக்கிறார்கள்.

Actress Radhika Apte said that she had to do phone sex during the audition of the movie Dev D directed by Anurag Kashyap. She never had phone sex after that, she added.

Category

🗞
News

Recommended