• 7 years ago
தமிழ் படம் ஒன்றில் நடிக்கும்போது தன்னிடம் சில்மிஷம் செய்த பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது என்று பல நடிகைகள் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே.
இந்நிலையில் அவர் நடிகை நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேஹா தூபியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கூறிய விஷயம் தான் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நான் தமிழ் படம் ஒன்றில் நடித்தபோது முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது பிரபலமான தென்னிந்திய நடிகர் ஒருவர் திடீர் என்று என் பாதங்களை வருடினார் என்றார் ராதிகா. அந்த நடிகரை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவர் என் பாதங்களை வருடியதும் கோபத்தில் அவரை ஓங்கி அறைந்துவிட்டேன் என்று ராதிகா ஆப்தே தெரிவித்தார். ராதிகா ஆப்தேவிடம் வாலாட்டி சப்புன்னு அறை வாங்கிய அந்த தமிழ் பட நடிகர் யார் என்று ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ராதிகா இதுவரை 4 தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது என்று துணிச்சலாக கூறியவர் ராதிகா. மேலும் படங்களில் படுக்கையறை காட்சிகள் என்று போல்டான காட்சிகளிலும் தைரியமாக நடித்து வருகிறார்.

Actress Radhik Apte told that she once slapped a popular South Indian actor who tickled her feet during the shoot of a tamil film.

Category

🗞
News

Recommended