• 8 years ago
கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்தும், கந்துவட்டி தீக்குளிப்பு குறித்தும் முகநூலில் கருத்து தெரிவித்து இருக்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. கடந்த அக்டோபர் 24ம் தேதி கந்துவட்டி கொடுமை தாங்காமல் இசக்கி முத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். நான்கு முறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும், போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து கார்ட்டூன் ஒன்றை தான் நடத்தி வரும் இணையப் பத்திரிகையிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். அதில் முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தீக்குளிப்பை தடுக்காமல் வாய்மூடி நிற்கும் வகையில் அந்த சித்திரம் வரையப்பட்டு இருந்தது.இதனால், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் புகாரில் நேற்று சென்னையில் பாலா கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார். கருத்து சுதந்திரத்தை நெரிப்பதாக அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளமான முகநூலில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக பக்கத்தில், இசக்கி முத்து குடும்பம் தீக்குளிப்பு சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவை பகிர்ந்து தனது கருத்தையும் சந்தீப் நந்தூரி பகிர்ந்து இருக்கிறார்.

Tirunelveli Collector Sandheep Nanduri Posted a Post about the Reason behind Cartoonist Bala Arrest. And also shared his Feeling about the incident Happened in front of his office.

Category

🗞
News

Recommended