• 7 years ago
முந்திய தலைமுறை இயக்குநர்களில் என் மண்ணுக்கும் மனத்துக்கும் பண்பாட்டுக்கும் மொழிக்கும் மிகவும் நெருக்கமான ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் பாக்கியராஜ்தான். பாரதிராஜாவின் தலைமைச் சீடரான பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் நிலைபிறழாத நேர்கோட்டுக் கதைப் படங்களுக்கு வகைச்சான்றுகள். அவர் இயக்கிய படங்களில் பத்துத் திரைப்படங்களையேனும் பாடமாகப் பயிலத்தக்க திரைக்கதைகள் என்று துணிந்து கூறலாம். கோபிச்செட்டிப்பாளையத்தின் சிறுவலூர், வெள்ளாங்கோட்டுப் பகுதியில் தம் முதற்பத்து அகவை வரை வளர்ந்தவர் அவர். என்னூரானது நொய்யற் படுகையில் அமைந்திருக்கிறது என்றால் இங்கிருந்து வடக்காக முப்பதாம் கிலோமீட்டரில் அவ்வூர்கள் இருக்கின்றன. இம்மண்ணின் கதைகளையும் ஊர்ப்புறத்து மக்களையும் அவர் நானுணர்ந்தவாறே தம் படங்களில் உருவாக்கி உலவவிட்டார் என்பேன்.

தமிழ்த் திரைப்படங்களில் கிராமியப் படங்கள் எவ்வூரை முன்வைத்தும் எழுதப்பட்டிருக்கலாம், அக்கதைகள் எங்கும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அவற்றை வயலும் வாய்க்காலுமாய்ப் படம்பிடிப்பதற்குக் கோபி பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் உடுமலை ஆகிய பகுதிகளை நோக்கித்தான் வந்தாக வேண்டும். அதனால் தமிழ்த் திரைப்புலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பான்மையான கிராமியப் படங்கள் கொங்கு நாட்டு ஊர்ப்புறத்து அழகுகளையே புறக்கூறுகளாகக் காட்டின. அதனால்தானோ என்னவோ கிராமியப் படங்கள் எல்லாமே மனத்துக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.

A nostalgia on K Bagyaraj's classic Thooral Ninnu Pochu movie

Category

🗞
News

Recommended