• 6 years ago
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டம் லண்டன்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்த், நியூசிலாந்த் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது.
242 ரன் இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சால் இங்கிலாந்த் திணறியது.
86 ரன்னில் 4 விக்கெட்களை எடுத்தது நியூசிலாந்த்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின்
வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது.
கைவசம் 2 விக்கெட் இருந்தது. போல்ட் வீசிய
அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் ரன் எடுக்கவில்லை.

3-வது பந்தில் அவர் சிக்சர் அடித்தார்.
4வது பந்தில் கூடுதலாக 4 ரன் கிடைத்தது.

ஆட்டம் பரபரப்பாக இருந்த நிலையில்,
இங்கிலாந்து 50 ஓவரில் 241 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

போட்டி டிராவில் முடிந்ததால், கோப்பை யாருக்கு
என்பதை முடிவு செய்ய சூப்பர் ஓவர் கடை பிடிக்கப்பட்டது.

ஆனால் சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.

இதையடுத்து அதிக பவுண்டரி அடிப்படையில்
இங்கிலாந்த் அணி உலக கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்துக்கு
28 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது பென்ஸ்டோக்சுக்கும்,
தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கும்
வழங்கப்பட்டது.

Category

🥇
Sports

Recommended