• 6 years ago
உலகக் கோப்பை கிரிக்கெட்
தொடரின் 39வது லீக் ஆட்டத்தில்
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இலங்கை அணி,
50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
338 ரன் எடுத்தது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ
அற்புதமாக ஆடி 104 ரன்னும்,
குசல் பெரேரா 64 ரன்னும் எடுத்தனர்.

339 ரன் எடுத்தால் வெற்றி
இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடத் துவங்கியது.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிய,
இன்னொருபுறம் நிக்கோலஸ் பூரன்
நங்கூரமாக நின்று ரன் சேர்த்தார்.
அவரது தன்னந்தனி போராட்டம்
பலன் தரவில்லை.
50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு
315 ரன் மட்டுமே எடுத்து,
23 ரன் வித்தியாசத்தில்
வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

Category

🥇
Sports

Recommended