• 6 years ago
பாஜக தலைவர் தமிழிசை சொன்னது போல வருமான வரி சோதனை வந்தால் அதற்காகப் பயமில்லை என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழிசை என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் நான் வெறும் அப்பா கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடிப்பவன் அரசியலுக்கு வரும் விருப்பம் எனக்கு இல்லை என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : நான் ஒரு சாதாரண நடிகர், ஏதோ அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை



Actor Sathyaraj says he has no plan to come into politics so bjp leader Tamilisai have no fear on him, and he hasnt bother is IT raids came to his house.

Category

🗞
News

Recommended