• 7 years ago
தமது வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க ஏற்பாடு செய்த தீபாவின் கணவர் மாதவன் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவாகிவிட்டார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தியாகராய நகர் வீட்டுக்குள் மித்தேஷ்குமா என்ற பெயரில் போலி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்து பரபரப்பை கிளப்பினார். அவர் மீது சந்தேகமடைந்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.இந்த மித்தேஷ்குமார் யார்? இவர் ஏன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தார்? தீபாவும் மாதவனும் பரபரப்புக்காக இப்படி செய்தார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. இந்த நிலையில் மித்தேஷ்குமார் என்கிற போலி அதிகாரி போலீசில் சரணடைந்தார்.



Chennai Police Team is searching Deepa's Husband Madhavan for Fake IT Raid Drama.

Category

🗞
News

Recommended