• 6 years ago
உலகை அதிர வைத்த மெரினா புரட்சியில் பங்கேற்ற நர்ஸ் ஜூலியின் முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இப்போது ஜூலி பிரபலங்களில் ஒருவராக உருவெடுத்தும் உள்ளார். மெரினாவில் கடந்த ஆண்டு ஜனவரி 18-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்களின் கிளர்ச்சி தொடங்கியது. இது ஒவ்வொரு நாளாக புரட்சியாக உருவெடுத்தது. மெரினா கடற்கரையெங்கும் மக்கள் வெள்ளம்.. எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதைப் போல சென்னை பெருநகர மக்கள் சாரை சாரையாக மெரினாவில் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்கான மெரினா புரட்சியில் வந்து இணைந்து கொண்டனர். உலகமே அதிரும் வகையிலான அறவழி புரட்சி மெரினாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது எழுந்த வித்தியாசமான முழக்கம்தான்.. கலாசலா கலாசலா சசிகலா... காணோம் காணோம் ஓபிஎஸ்ஸை காணோம்.. வர சொல் வர சொல் ஓபிஎஸ்ஸை வர சொல்.. சின்னம்மா சின்னம்மா.. எங்கம்மா எங்கம்மா? என்ற முழக்கங்கள்.

Today is the firs Anniversary of Jallikattu Revolution which was held at Chennai Marina Beach on 2017.

Category

🗞
News

Recommended