• 7 years ago
ஹீரோவாக தேவி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆன பிரபுதேவாவின் அடுத்த படம். டிசைன்களில் விலங்குகள், காமிக் படங்களை போட்டு குழந்தைகளுக்கான படமாக பில்டப் கொடுக்கப்பட்ட படம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்துகிறதா என்று பார்ப்போம். சிலைகளை கடத்தி விற்கும் மன்சூர் அலிகான் கும்பலில் 'மூளை சாமானை' உபயோகிக்கும் புத்திசாலியாக பிரபுதேவா, பார் டான்சராக இருந்துகொண்டே வசதியானவர்களை செக்ஸ் ஆசை காட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் ஹன்சிகா, நூதனமான முறைகளில் கார் திருட்டில் ஈடுபடும் ரேவதி இவர்களுக்கு மதுசூதனன், ஆனந்த்ராஜ் அண்ட் கோவால் ஒரு அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த அசைன்மெண்டில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை ஆங்காங்கே சிரிக்கவும் சில இடங்களில் நெளியவும் வைத்து சொல்வதுதான் குலேபகாவலி.

Prabhu Deva starrer Pongal release Gulebaghavali review.

Category

🗞
News

Recommended