• 8 years ago
ஓவியா தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ட்விட்டரில் வரும் 20ம் தேதி லைவ் சாட் செய்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவர் பிரபலமானார் ஓவியா. ரசிகர்கள் சேர்ந்து ட்விட்டரில் அவருக்கு ஆர்மி அமைத்துள்ளனர். ஓவியாவுடன் ட்விட்டரில் சாட் செய்ய ரசிகர்கள் ஆசைப்பட்டனர். தங்களின் ஆசையை ட்விட்டர் மூலம் ஓவியாவிடம் தெரிவித்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியா நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களுடன் சாட் செய்வதாக ஓவியா கடந்த செம்படம்பர் மாதம் 18ம் தேதி ட்வீட்டினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஓவியா ட்விட்டரில் சாட் செய்யவில்லை. அவர் பாட்டிற்கு படங்கள், பார்ட்டிகள் என்று பிசியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஓவியா சாட் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி தலைவி மீது நாங்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் மாறாது என்று ஓவியா ஆர்மி தெரிவித்து வந்தது.
வரும் 20ம் தேதி இரவு 8 மணிக்கு ட்விட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்கிறார் ஓவியா. இதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளதாக அவர் இன்று ட்வீட்டியுள்ளார்.


Oviya is finally having a chat session with her fans on twitter on december 20th. Oviya Army is glad after seeing her about the chat session.

Category

🗞
News

Recommended