• 7 years ago
ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார். ஜென்மசனி கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள். இனி எல்லாம் விலகும்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கப் போகிறார். விருச்சிகத்தில் உள்ள விசாகம் 4ம் பாதம், அனுஷம்,கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பலன்களை பார்க்கலாம்.ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார். ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் உங்களுக்கு இனி பாத சனியாக இரண்டரை ஆண்டுகள் பயணிக்கப் போகிறார். போக்குச்சனியாக இருப்பதால் நன்மைகள் கிடைக்கும். ஏழரை முடியும் போது பலவித நல்ல பலன்களை கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான்.

ஜென்மசனியில் பாடாய் படுத்தி விட்டார் சனி பகவான். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது ராசிக்குப் போகிறார். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனியால் குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். துன்பங்கள் குறையும், நன்மைகள் கிடைக்கும்.

சனிபகவான் 2ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த பகை நீங்கும். சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம் சண்டை வேண்டாம் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

Sanipeyarachi 2017 palangal parikarangal for Viruchigam rasi. Details palangal Vishagam, Anusham and Kettai Stars.

Recommended