ஜெயலலிதாவை பார்க்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்!- வீடியோ

  • 6 years ago
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரோடு இருந்த வரை ஒரு முறை கூட தான் பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நிதித்துறை கருவூலம் மற்றும் கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊதியதாரர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது : பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக செயல்பட முடியாது என்று கூறி இருந்தார், இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் முரளிதரராவ் கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து.

Category

🗞
News

Recommended