புள்ளைய பெத்து வளர்க்கச் சொன்னா பேயை வளர்த்து வளர்த்திருக்கிறார்கள் என்று கொலையாளி தஷ்வந்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்போடு பதிவிட்டு வருகின்றனர். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். அவரைத் தேட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர்களுக்கு சொந்தமான அபார்ட்மென்டில் இருக்க பிடிக்காமல் குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
வேலையில்லாமல் இருந்த தஷ்வந்த் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2ஆம் தேதியன்றும் அப்பா வேலைக்கு போன உடன் அம்மா சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரளா மறுக்கவே, தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Category
🗞
News