• 8 years ago
தன்னுடைய பெயரை ராஜா ஹரிஹர ஷர்மா என்று அவதூறு பரப்பப்புவோர்களுக்கு பதிலடியாக வாக்காளர் அடையாள அட்டை ஆதாரத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. ஆனால் அங்கும் நெட்டிசன்கள் பூந்து விளையாடி அவரை கடுப்பேத்தி வருகின்றனர். மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டதால் பல முனை தாக்குதலுக்கு ஆளானார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. ஆனால் அந்த விவகாரத்திற்கு அதோடு முற்றுப்புள்ளி வைக்காமல் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு நான் சொன்னதில் தவறில்லை அவர் ஜோசப் விஜய் தான் இதோ ஆதாரம் என்பது போல உண்மை எப்போதுமே கசக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஒருவழியாக மெர்சல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் எச். ராஜவின் முழுப்பெயர் ராஜா ஹரிஹர ஷர்மா என்று புது பூதத்தை சமக வலைதளங்கள் குறிப்பிட்டனர்.

H.Raja this time released his voter id card for reference of his name and that too trolled by Netizens.

Category

🗞
News

Recommended