• 8 years ago
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள அண்ணா என்ற தமிழ் வார்த்தைக்கு அஜித் அண்ணனுடன் நடிக்க வேண்டும் என்று உதாரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, குஜராத்தி மொழியைச் சேர்ந்த 70 வார்த்தைகள் புதிதாக அகராதியில் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணா என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது.
உறவு முறையில் அண்ணா என்றால் மூத்த சகோதரர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும், ஆனால் இந்த வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இடம்பெற்றதன் மூலம் அண்ணா என்ற வார்த்தை உலக அரங்கிற்கு சென்றுள்ளது. அண்ணா 2 அண்ணண் என்றும் சொல்லப்படும் இந்த வார்த்தைக்கான அர்த்தமாக ஆக்ஸ்போர்டு சில விளக்கங்களையும் கொடுத்துள்ளது

OED added new tamil word Anna and explains this word with a sentence framing with Actor Ajith and this made ajith fans much happier

Category

🗞
News

Recommended