• 6 years ago
தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழுந்திருக்காதது சர்ச்சைக்குரியதாகியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அப்போது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழா முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கீ.வீரமணி டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Lyricist Vairamuthu says in twitter that National Anthem and Tamil Thaai Vazhthu should be equally respected.

Category

🗞
News

Recommended