• 2 years ago
மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர் சங்கத் தலைவர் உறுதிமொழியை வாசிக்க அதை முதலாண்டு மாணவர்கள் வாசித்தனர். அதில் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் பெயரில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக உணர்வுப்பூர்வமான விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு அரசுக் கல்லூரியில் நிகழ்ந்த இப்படிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sanskrit Oath controversy: Madurai Medical college student association says that we had took oath in English only, not in Sanskrit

Category

🗞
News

Recommended