• 6 years ago
தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த முறைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



Train tickets printed in a local language apart from English and Hindi came into action from today, suburban train passengers welcomed the step.

Category

🗞
News

Recommended