தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 2 கோடி பேர் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர். ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக ரூ.3 உள்ள கட்டணத்தை ரூ.5 ரூ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயருகிறது. அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும்.
இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பேருந்து கட்டணங்கள், மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்துகளின் கட்டண உயர்வால் கூலித் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
Tamilnadu Government has increased the MTC and moffusil bus prices upto 66 percentage. People opposes to this and demands to get back the price hike.

Category
🗞
News