• 6 years ago
வேண்டுதலுக்காக கார், வீடு, குழந்தை பொம்மைகள் செய்து கோவில் வைக்கும் பக்தர்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்

கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து அய்யனார் கோயில் உள்ளது.. 366 ஆண்டுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர், இந்த பகுதி மக்களுடைய பல்வேறு நோய்களை குணமாக்கி இருக்கிறார். பின்னர், அந்த கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அந்த கிணற்றின் மேலேயே சித்தருக்கு எளிமையான கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முகப்பில் ஆலமரத்தின் அடியில் உள்ள அழகு முத்து அய்யனாரின் வலது கையில் பிரம்மாண்டமான வாள் இருக்கிறது. அந்த வாளில் ஏராளமான சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல் சீட்டுகள். பக்தர்கள் தங்களின் வேண்டுதலை தாளில் எழுதி அழகர் கையில் இருக்கும் வாளில் கட்டுகின்றனர். பின்னர், அந்த வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்தி கடனாக சிமென்ட்டில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். அவர்களின் வேண்டுதல் என்னவோ, அதற்கு ஏற்ற சிலைகளை பொம்மையாக வைத்து செல்வதால் கோயிலை சுற்றிலும் ஏராளமான சிமென்ட் பொம்மை சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன.குழந்தை வரம் வேண்டியோர், குழந்தை சிலைகளை வைக்கின்றனர். ஒருசிலர், தங்கள் பிள்ளைகள் டாக்டர், வழக்கறிஞர், போலீஸ் போன்ற பதவிகளை பெற விரும்புவார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அதுபோன்ற சிலைகளை வைக்கிறார்கள். ஒரு சிலருக்கு கை, கால் பிரச்சினை ஏற்பட்டு அது சரியானதும் அந்த உறுப்பையே உருவமாக செய்து வைக்கின்றனர். அதுபோல, கார், வீடு வேண்டி நிறைவேறியதும் அந்த சிலைகளை வைக்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள இந்த சிலைகளை வணங்கி சுற்றிய பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் வருகின்றனர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் பொம்மைகள் சூழ புதுமையாக அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயிலை புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

DES : Let's see a newsletter about car, house and baby toys for prayers

Category

🗞
News

Recommended