• 7 years ago
நடிகை த்ரிஷாவை பற்றி பெருமையாக பேசியுள்ளார் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்புவும், த்ரிஷாவும் ஜோடியாக நடித்தார்கள். அவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்பு இல்லை. சிம்புவுக்கு பதில் மாதவன் நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு தனது தோழி த்ரிஷா பற்றி பெருமையாக பேசியுள்ளார். த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே தெரியும் என்று கூறியுள்ளார். த்ரிஷா நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயினாகிவிட்டார். ஹீரோயினாகிவிட்டால் இருக்கும் பந்தா எதுவும் த்ரிஷாவிடம் கிடையாது என்கிறார் சிம்பு. த்ரிஷா பற்றி சிம்பு பெருமையாக கூறியதை கேட்டு அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிம்புவும், த்ரிஷாவும் நல்ல நண்பர்கள் என்பது அவர் கூறாமலேயே அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Actor Simbu has talked high of good friend Trisha in a television programme. He said that Trisha is the same right from the beginning irrespective of her status. Nayanthara and Simbu love each other for a while. Later, both were separated by some problems. In this situation, Simbu has spoken openly after a long time about Nayanthara.

Category

🗞
News

Recommended